சர்க்கஸில் காட்டிய வித்தைகளில் ஒன்றான சீட்டுக் கட்டு வித்தையை தன் மகள் சகுந்தலாவிடம் அவர் அப்பா விளையாட்டுக்குச் செய்துகாட்ட,  அதைக் கூர்ந்து கவனித்துக்கொண்டிருந்த மூன்று வயது சகுந்தலா, ஒருநாள், 'நானும் கொஞ்சம் சீட்டில் வித்தை காட்டட்டுமா?' என்று கேட்டு, தந்தையை ஆச்சர்யத்தில் மூழ்கடித்தார். 'இனிமேல் நாம் சர்க்கஸ் வேலைக்குப் போக வேண்டியதில்லை. இந்த சீட்டு வித்தை போதும்' எனத் தன் மகள் சகுந்தலாவுடன் ஊர் ஊராகச் சுற்ற ஆரம்பித்தார் அவர்.

வித்தை மூலம் வருமானம் வந்ததோடு, சகுந்தலாவின் திறமையும் வெளிப்பட்டது. தன் ஆறு வயதில் கணக்கு மற்றும் நினைவாற்றல் திறமைகளை மைசூர் பல்கலைக்கழகத்திலும், எட்டு வயதில் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலும் வெளிப்படுத்தி, அனைவரையும் தன்னைத் திரும்பிப் பார்க்கச் செய்தார்.


    இதனை தொடர்ச்சியாக வாசிக்க/பார்க்க ‘Next' பட்டனை அழுத்துங்கள்

    « Previous Next »

YOUR REACTION?