''பிறந்தது முதல் 2, 3 வயது வரையிலான குழந்தைகளுக்கு பால்தான் பிரதான உணவாக இருக்கும். அப்படிக் கொடுக்கப்படும் பாலானது, பெரும்பாலும்குழந்தை பால் பிளாஸ்டிக் பாட்டில்களில்தான் (பால் புட்டி) கொடுக்கப்படுகிறது. எளிதில் கிருமித்தொற்று ஏற்படக்கூடிய பிளாஸ்டிக் பாட்டில்களில் குழந்தைகளுக்கு பால் கொடுக்கும்போது, சுகாதாரமான முறையைக் கடைபிடிப்பதில் தாய்மார்கள் அதிக எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும். மாற்றாக, 10 மாதத்தில் இருந்தே குழந்தையை டம்ளரில் பால் குடிக்கப் பழக்குவது மிகவும் சிறந்தது, பாதுகாப்பானது'' என்று வலியுறுத்தும் குழந்தைகள் நல மருத்துவர் கோபாலகிருஷ்ணன், குழந்தைக்குப் பால்புட்டி பயன்படுத்தும்போது தாய்மார்கள் கட்டாயம் கடைபிடிக்கவேண்டிய  ஆலோசனைகளைக் கூறுகிறார்.

''முன்பெல்லாம் குழந்தை பிறந்ததில் இருந்து முதல் இரண்டு வயதுவரை தாய்ப்பால் கொடுப்பார்கள். இதனால் குழந்தைக்கு அதிக எதிர்ப்புசக்தி கிடைத்தது. மேலும், தேவைப்படும்பட்சத்தில் குழந்தைகளுக்கு பாலாடை அல்லது சங்கடையில்தான்பால் கொடுப்பார்கள். இதனால் குழந்தைகளுக்கு புரை ஏற்படாது. 

ஆனால் இன்றைக்கு குழந்தை பிறந்தது முதல் 3-6 மாதங்கள் மட்டுமே தாய்ப்பால் கொடுத்துவிட்டு, பிறகு சில ஆண்டுகளுக்கு பாக்கெட்பால் அல்லது பால்பவுடர் பாலைத்தான் தாய்மார்கள் அதிகம் கொடுக்கின்றனர். அதுவும் கால் லிட்டர் முதல் அரைலிட்டர் வரை கொள்ளவு கொண்ட பால் புட்டிகளில் காய்ச்சிய பாலை ஊற்றி குழந்தையின் வாயில் வைத்துவிடுவது ஆரோக்கியமான பழக்கம் அல்ல. 


    இதனை தொடர்ச்சியாக வாசிக்க/பார்க்க ‘Next' பட்டனை அழுத்துங்கள்

    Next »

YOUR REACTION?